அ.தி.மு.க., அ.ம.மு.க, தொண்டர்கள் உரிமை மீட்பு கட்சியினர் மரியாதை: முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் அனுசரிப்பு
தேனி: மாவட்டத்தில் அ.தி.மு.க., அ.ம.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் அ.தி.மு.க., தொண்டர்கள் தேனி: மாவட்டத்தில் அ.தி.மு.க., அ.ம.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஆண்டிபட்டி தாலுகா வருஷநாட்டில் அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடமலைகுண்டு மயிலாடும்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தட்டிக்காளை, நிர்வாகிகள் செந்தில், பீமராஜன், செல்வா, வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பழனிசெட்டிபட்டியில் அ.தி.மு.க., பேரூராட்சி செயலாளர் தீபன் சக்கரவர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். தேனியில் கிளைகள் வாரியாக முன்னாள் முதல்வர் ஜெ., உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கவுன்சிலர் கிருஷ்ணபிரபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் அல்லிநகரத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் அல்லிநகரத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
வடக்கு நகர செயலாளர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். நகர துணைச் செயலாளர் மயில் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகேசன், அவைத்தலைவர் குருசாமி உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி: அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகில் ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் உட்பட அ.தி.மு.க., ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம்: பழைய பஸ்ஸ்டாண்ட்டில் முன்னாள் முதல்வர் ஜெ., படத்திற்கு அ.தி.மு.க., நகர செயலாளர் பழனியப்பன் மாலை அணிவித்தார்.
மாவட்ட இணைச் செயலாளர் முத்துலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ., பெரிய வீரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது சலீம், நகர துணை செயலாளர் வெங்கடேஷ் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பாக
முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத் அலுவலகம் முன் முன்னாள் முதல்வர் ஜெ., படத்திற்கு மாவட்ட செயலாளர் சையதுகான் மாலை அணிவித்தார்.
நகர செயலாளர் அப்துல்சமது, ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, ஆண்டி, கவுன்சிலர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் ஜின்னா, முருகானந்தம், அன்பு, ரெங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
அ.ம.மு.க.,வினர் வடகரை எம்.ஜி.ஆர்., மன்றத்தில் முன் முன்னாள் முதல்வர் ஜெ., படத்திற்கு நகர செயலாளர் குபேந்திரன் மாலை அணிவித்தார்.
கவுன்சிலர்கள் மணி வெங்கடேசன், பால்பாண்டியன், வார்டு செயலாளர் ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
தேவதானப்பட்டி, வடுகபட்டி, தாமரைக்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.