934 பேருக்கு பட்டா வழங்க பரிந்துரை
தேனி:ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 934 பேருக்கு பட்டா வழங்க பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருவாய்த்துறை சார்பில் நகர்பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க உள்ளதாக அமைச்சர் சாத்துார் ராமசந்திரன் கூறி உள்ளார்.
இதற்காக தாலுகா வாரியாக ஆட்சேபனை அற்ற புறம்போக்கில் வசிப்பவர்கள் பற்றி சர்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தேனி மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் இருந்து 934 பேருக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதில் எத்தனை பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது என தெரியவில்லை என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.