Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான போட்டி வேளாண் துறையினர் ஆய்வு

தேனி: மாநில அளவில் அதிக சாகுபடி திறன் கொண்ட விவசாயிகளை தேர்வு செய்யும் போட்டியை வேளாண் துறையினர் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் கம்பு, உளுந்து, பாசிப்பயறு, துவரை, கடலை, எள், கரும்பு, பாரம்பரிய நெல் ரகத்தில் அதிக அளவில் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் விருது, பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

துவரை சாகுபடி மகசூல் தொடர்பாக அறுவடை செய்யும் பகுதிகளில் அளவீடு பணிகள் நடந்து வருகிறது.

தேனியில் கண்டமனுார், உத்தமபாளையத்தில் நடந்த போட்டிகளை தேனி வேளாண் துணை இயக்குநர் ராஜசேகரன், தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் திலகர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை உதவி இயக்குநர் உமா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *