Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

புதிய வழித் தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பிக்கலாம்

தேனி; மாவட்டத்தில் மினிபஸ்கள் இயக்க 34 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மினி பஸ் இயக்க விருப்ப முள்ளவர்கள் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழித்தடங்கள் விபரம் : பெரியகுளம் பஸ் ஸ்டாண்ட்- அடுக்கம், பெரியகுளம் பஸ் ஸ்டாண்ட்- கும்பக்கரை பாரஸ்ட் செக்போஸ்ட், பெரியகுளம் ஜி.எச்.,-அடுக்கம், ஆண்டிபட்டி முருகன் தியேட்டர்- ரோசனம்பட்டி,ஆண்டிபட்டி முருகன்தியேட்டர்- முத்தனம்பட்டி, ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன்-ஏத்தகோயில், சமதர்மபுரம்-அம்மாபட்டி, க.விலக்கு மருத்துவக்கல்லுாரி- வைகைபுதுார், க.விலக்கு மருத்துவக்கல்லுாரி-மேல்மங்கலம், மாவட்ட நீதிமன்றம்-ஜெ.ஏ., கல்லுாரி, வருஷநாடு-சின்னசுருளி, மயிலாடும்பாறை-மூலக்கடை, மயிலாடும்பாறை-ஆட்டப்பாறை, கூடலுார்- சுருளி அருவி, கே.ஜி.,பட்டி-கூடலுார், உத்தமபாளையம் நகர், உத்தமபாளையம்-பண்ணைபுரம், உத்தமபாளையம்-ரெங்கநாதபெருமாள்கோயில், கம்பம்-காக்கில்சிக்கையன்பட்டி, கம்பம்-கோம்பை, கம்பம்-கூடலுார், போடி ரயில்வே ஸ்டேஷன்-சூலப்புரம், போடி ரயில்வே ஸ்டேஷன்-போ.மீனாட்சிபுரம், போடி ரயில்வே ஸ்டேஷன்-போடி நகர் , போடி அரசு இன்ஜினியரிங் கல்லுாரி-சிறைகாடு, அரசு இன்ஜினியரிங் கல்லுாரி- சோலையூர், கம்பம் காந்திசிலை- சி.புதுப்பட்டி, காரிப்பட்டி-கொட்டக்குடி, முதுவாக்குடி-கொட்டக்குடி என வழித்தடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *