மங்கள கோம்பை ஓடை ஆக்கிரமிப்பு
போடி : போடி மங்களகோம்பை கரட்டு பகுதியில் இருந்து மேலச்சொக்கநாதபுரம் வரை 4 கி.மீ., தூரம் மங்கள கோம்பை நீர்வரத்து ஓடை அமைந்து இருந்தது.
மழை நீரானது இந்த நீர்வரத்து ஓடையில் பெருக்கெடுத்து வந்து மேலச் சொக்கநாதபுரம் கண்மாயில் கலந்தது.
தற்போது நீர்வரத்து ஓடைப் பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமித்து இலவம், தென்னை உள்ளிட்ட விவசாயம் செய்து வருவதோடு, கட்டடங்கள் கட்டி ஓடை இருக்கும் இடம் தெரியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
முறையாக சர்வே செய்து நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.