மாரியம்மன் கோயில் திருவிழா
மூணாறு : மூணாறு அருகே குண்டுமலை எஸ்டேட் லோயர் டிவிஷனில் 79ம் ஆண்டு மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.
அதனை எஸ்டேட் மேலாளர் ராகேஷ்ரவி துவக்கி வைத்தார். மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. அதேபோல் கோயில் வளாகத்தில் உள்ள செல்வ கணபதி, வடக்கத்தி அம்மன், சிவலிங்கம், நவகிரகம் ஆகியவற்றிற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பக்தர்கள் தீ மிதித்தும், பால்குடம், முளைப்பாரி, மாவிளக்கு, தீச்சட்டி ஆகியவை எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
விழா நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானமும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.