‛’டிஜிட்டல் கைது ‘ மோசடி குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு
தேனி: மாவட்டத்தில் டிஜிட்டல் கைது மோசடி குறித்த ‘சிந்தித்து செயலாற்று’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு குறும்படத்தை எஸ்.பி.,சிவபிரசாத் வெளியிட்டார்.
ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஜெரால்டு அலெக்ஸாண்டர், வினோஜி, சுகுமார், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., தீவான்மைதீன் முன்னிலை வகித்தனர்.எஸ்.பி., கூறியதாவது:
சைபர் குற்றங்களில் ‘டிஜிட்டல் கைது’என்ற புதுவகை மோசடி புகார்கள் அதிகரித்துள்ளன. அதனால் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய விழிப்புணர்வு குறும்படம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இக்குறும்படம் வெளியிட்டுள்ளோம்.
சட்ட அமலாக்கத்துறையின் பெயர்களை பயன்படுத்தி இந்த ‘டிஜிட்டல் கைது’மோசடிகள் நடக்கின்றன. வீடியோ காலில் அழைக்கும் மர்மநபர்கள் போதைப் பொருட்கள், தங்கக்கடத்தல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து ஏமாற்றுகின்றனர்.
இதனை நம்பிய பலர், தங்களது பணத்தைஇழப்பது தொடர்கிறது. கடந்தாண்டில் இருந்து தற்போது வரை 30 புகார்கள் சைபர் கிரைம் போலீசிற்கு வந்துள்ளன.
ரூ.3 கோடி வரை புகார்தாரர்கள் இழந்துள்ளனர்.
பாதிக்கப்படுவோர் 1930 என்ற டோல்பிரி எண்ணிலும், www.cybercrime.gov.in என்றஇணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம், என்றார்.
குறும்படத்திற்கு கதை வசனம் எழுதியசைபர் கிரைம் சமூக வலைதளப் பிரிவு எஸ்.ஐ., பாக்கியம், இயக்குனர்கள் பூபதி ராஜா, ஈஸ்வரன், எடிட்டர் நவீன், குறும்படத்தில் நடித்த சிறப்பு எஸ்.ஐ.,கள் ரவீந்திரன், ராஜ்குமார், ஏட்டு முத்துராஜா, போலீஸ்காரர்கள் சித்ரா தேவி, ராஜேஷ்கண்ணன், ஸ்டெனோ நிஷா உள்ளிட்டோருக்கு எஸ்.பி., கேடயம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.