ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி தடகளப் போட்டியில் சாம்பியன்
கூடலுார்: அன்னை தெரசா பல்கலை அளவிலான 22வது தடகளப் போட்டியில் கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது.
கல்லுாரி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தனர். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையின் கீழ் இயங்கும் 13 கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். பல்கலை., துணைவேந்தர் கலா ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். உடற்கல்வி இயக்குனர் ராஜம் வரவேற்றார். ஓட்டப் போட்டிகள், தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் மொத்தம் 111 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லுாரி பெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம், நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கல்லுாரி ஆலோசனை குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், பொன்னுராம், சக்தி வடிவேல், சுப்பிரமணியன், துணை முதல்வர் வாணி, உடற்கல்வி ஆசிரியை சுசிலா, சூரிய பிரபா, விளையாட்டுத்துறை உறுப்பினர்கள் முனீஸ்வரி, ஷேக் நஸ்ரின், அர்ச்சனா, விரிவுரையாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.