ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிைலப்படியுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் திடீரென தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வரன், பவுன்தாய், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாளி, சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் தங்கமீனா, கிருபாவதி, பிற சங்க நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், நாகஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.