தேனி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
தேனி: தேனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தமிழ்நாட்டில் வழக்கறிஞர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். சேம நில நிதியில் ஸ்டாம்ப் விலை ரூ.30 லில் ரூ.120 ஆக உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும்.
சேமநல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைநிறைவேற்ற வலியுறுத்தி நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, கறுப்பு பேட்ஜ்’அணிந்து, லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் அழகேந்திரன், ஆனந்தகுமார், ஆனந்தன், பெண் வழக்கறிஞர் வித்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனால் நீதிமன்றங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.