மாநில விளையாட்டுப் போட்டி இன்று துவக்கம்: 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
தேனி; தேனி மாவட்டத்தில் 14வயதுக்கு உட்பட்டோருக்கான பள்ளி மாணவி, மாணவிகளுக்கான குடியரசு தின போட்டிகள் இன்று (பிப்.,6) துவங்குகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10ஆயிரம் பேர் பங்கேற்கின்றன
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 14,17 வயதிற்குட்பட்டவர்களுக்கு குடியரசு தின போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் முடிந்துள்ளது. 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான குழு போட்டிகள் மாவட்டத்தில் இன்று துவங்கி பிப்.,11 வரை நடக்கிறது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா 5ஆயிரம் மாணவர்கள், மாணவிகள் பங்கேற்கின்றனர்.
கால்பந்து போட்டிகள் ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்., மேல்நிலைப்பள்ளி, புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி, கபடி போட்டி உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்., மேல்நிலைப்பள்ளி, வாலிபால் போட்டி கம்பம் அல் அஜ்ஹர் மேல்நிலைப்பள்ளி, டேபிள் டென்னிஸ் கம்பம் ஆர்.ஆர்., இன்டர்நேஷனல்பள்ளி, பூப்பந்து போடி இசட்.கே.எம்., மேல்நிலைப்பள்ளி, கைப்பந்து முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, டென்னிஸ் மாவட்ட விளையாட்டு அரங்கம், முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, இறகுப்பந்து முத்துத்தேவன்பட்டி சாந்திநிகேதன் பப்ளிக் பள்ளி, எறிபந்து முத்துத்தேவன்பட்டி என்.எம்.எச்.என்.யூ., மேல்நிலைப்பள்ளி, கோ-கோ லட்சுமிபுரம் ஸ்ரீரோஸி வித்யாலயா, கூடைப்பந்து மாவட்ட விளையாட்டு அரங்கம், தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஹாக்கி மாவட்ட விளையாட்டு அரங்கம், ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது.