டூவீலர்கள் மோதிய விபத்தில் கணவன் , மனைவி படுகாயம்
தேவதானப்பட்டி, பிப். 21: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி கம்பெனிதெருவைச் சேர்ந்தவர் விவசாயி அய்யங்காளை(52). இவர் தனது மனைவி தனலட்சுமியுடன் டூவீலரில் தேவதானப்பட்டி காட்டுப்பள்ளிவாசல் அருகே இவர்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்கு நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது தேவதானப்பட்டி அட்டணம்பட்டி அருகே பைபாஸ் சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் அய்யங்காளை மற்றும் தனலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சைக்காக வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். இது குறித்து புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய டூவீலரை ஓட்டிவந்த ஆண்டிபட்டியைச் சேர்ந்த அய்யாத்துரை என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.