பள்ளி விளையாட்டு விழா
உத்தமபாளையம்,: கோம்பை கன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப் பள்ளியின் 133 வது ஆண்டு விழா, விளையாட்டு விழா ஜமீன்தார் சீனிவாச ராயர் தலைமையில் நடந்தது. தேசிய கொடியை மின்வாரிய பொறியாளர் தங்கப் பாண்டியன், பள்ளி கொடியை பொறியாளர் ராமசுப்ரமணியன் ஏற்றி வைத்தனர். மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை பள்ளி செயலர் சேகர் ஏற்று விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், கனரா பாங்க் மானேஜர் நடராசன், பேரூராட்சி தலைவர் மோகன் ராஜா ஆகியோர் பதக்கம் சான்றிதழ்களும் வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து பள்ளி செயலர் ராஜசேகர் தலைமையில் ஆண்டு விழா நடந்தது. பச்சையப்பா பள்ளி செயலர் லட்சுமி வாசன், பழனியப்பா வித்யாலயா செயலர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் ஜெயசுந்தரம், கரூர் வைஸ்யா பாங்க் மேனேஜர் சந்தோஷ்குமார் பங்கேற்றனர். ஆண்டறிக்கையை தலைமையாசிரியை சித்ரா வாசித்தார். மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.