திராட்சை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
தேனி : மழையால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள திராட்சை விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் தலைவர் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் திராட்சை உற்பத்தியில் தேனி மாவட்டம் முன்னிலையில் உள்ளது. மாவட்டத்தில் ஓடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், கம்பம், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 5ஆயிரம் கிலோ வரை அறுவடை செய்யப்படுகிறது.
கடந்த இரு மாதங்களில் பெய்த கனமழையால் அறுவடை பாதித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. திராட்சை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2லட்சம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.