தென்னிந்திய சிலம்ப போட்டி போடி மாணவர்கள் முதலிடம்
போடி: தென்னிந்திய அளவில் கோவையில் நடந்த சிலம்ப போட்டியில் போடி நீலமேகம் பிள்ளை அகடாமியை சேர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்கள் விபரம்:
11 வயதுக்கு கீழ் 26 கிலோ எடை பிரிவில் ஒற்றை வாள் வீச்சு போட்டியில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி மாணவி ரித்திஷா, 14 வயதுக்கு கீழ் 27 கிலோ எடை பிரிவில் இரட்டை சுருள்வாள் போட்டியில் ஜ.கா.நி., மெட்ரிக் பள்ளி மாணவர் சக்தி ஸ்ரீ, 33 கிலோ எடை பிரிவில் அன்பரசன், 37 கிலோ எடை பிரிவில் தேனி மேரி மாதா பப்ளிக் பள்ளி மாணவர் யாதீஷ் குமார் முதலிடம் பெற்றனர்.
11 வயதுக்கு கீழ் 27 கிலோ எடை பிரிவில் ஒற்றை சுருள் வீச்சு போட்டியில் போடி காமராஜர் மெட்ரிக் பள்ளி மாணவி பிரகதீசா, 36 கிலோ எடை பிரிவில் தேனி வேலம்மாள் பப்ளிக் பள்ளி மாணவி லக்சிதா, 50 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி., மெட்ரிக் பள்ளி மாணவர் ஹேவந்த் முதலிடமும், 20 கிலோ எடை பிரிவில் தேனி மேரிமாதா பப்ளிக் பள்ளி மாணவர் கிரீஸ் 2 ம் இடம் பெற்றனர். 14 வயதுக்கு கீழ் 66 கிலோ எடை பிரிவில் போடி தி ஸ்பைஸ் வாலி பப்ளிக் பள்ளி மாணவர் கங்கேஸ், 60 கிலோ எடை பிரிவில் போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி விஷாலி முதலிடம் பெற்றனர். 8 வயதுக்கு கீழ் ஒற்றை கம்பு வீச்சில் 20 கிலோ எடை பிரிவில் போடி சிசம் பப்ளிக் பள்ளி மாணவி ரேணா 2ம் இடமும், 19 கிலோ எடை பிரிவில் மைத்ரேயாசிங் முதலிடம் பெற்றனர்.
11 வயதுக்கு கீழ் 40 கிலோ எடை பிரிவில் ஒற்றை கம்பு வீச்சில் தேனி லிட்டில் கிங்டம் பள்ளி மாணவி தேஜாஸ்ரீ முதலிடமும், 14 வயதுக்கு கீழ் 50 கிலோ எடை பிரிவில் போடி சிசம் மெட்ரிக் பள்ளி மாணவர் கோகுல்பாலன், 79 கிலோ எடை பிரிவில் போடி 7வது வார்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர் நாவலன், 42 கிலோ எடை பிரிவில் ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயா 2 ம் இடம் பெற்றனர்.
17 வயதுக்கு கீழ் 62 கிலோ எடை பிரிவில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாண்டி மீனா, 66 கிலோ எடை பிரிவில் துர்க்கை வேணி முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட சிலம்ப சங்க தலைவர் குமார், செயலாளர் நீலமேகம், மாஸ்டர்கள் சொக்கர்மீனா, மோனீஸ்வர், தீபன், வாஞ்சிநாதன் ஆகியோர் பாராட்டினர்.