ஓட்டல் உரிமையாளர் மீது தாக்கு ஓட்டல் உரிமையாளர் மீது தாக்கு
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் வேலு 48.
ஊராட்சி அலுவலகம் எதிரே ஓட்டல் நடத்தி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் 56. வேலுவிடம் பரோட்டா கடனாக கேட்டுள்ளார். ஏற்கனவே கடன் பாக்கி அதிகம் உள்ளது கடன் இல்லை என வேலு தெரிவித்தார்.
இதில் கோபமடைந்த முருகன், மது பாட்டிலை உடைத்து வேலு உடலில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜெயமங்கலம் போலீசார் முருகனை கைது செய்தனர்.
தேவதானப்பட்டி, பிப். 21–
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் வேலு 48.