தடுப்புச்சுவரின்றி ஆபத்தான தெப்பம்
போடி: போடி அருகே சிலமலை – மணியம்பட்டி செல்லும் ரோட்டில் மழைநீர் தெப்பம் உள்ளது. மழை காலங்களில் தெப்பத்தில் மழைநீர் தேங்கும். இத் தெப்பம் உரிய பராமரிப்பு இல்லாததால் முட்புதர் சூழ்ந்துள்ளது. தெருக்களில் சேகரமாகும் குப்பைகளை தெப்பத்தில் கொட்டுவதால் மழை நீர் தேக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
தேங்கிய குப்பையால் அருகே சுகாதாரகேடு ஏற்படுகிறது. தடுப்புச்சுவர் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். முப்புதர் சூழ்ந்து உள்ள மழைநீர் தெப்பத்தை சீரமைப்பதோடு, தடுப்புச்சுவர் அமைத்திட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.