கம்பம் அரசு பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 புதிய வகுப்பறைகள்
கம்பம், பிப். 23: கம்பம் நகராட்சிக்குட்பட்ட 11வது வார்டு முகைதீன் ஆண்டவர்புரம் பெண்கள் நடுநிலைப்பள்ளியில் ஆறு புதிய வகுப்பறைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார். நபார்டு வங்கி நிதியுதவி மூலம்(2023-24திட்டத்தின் கீழ்) ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் முகைதீன் ஆண்டவர்புரம் நகராட்சி பெண்கள் துவக்கபள்ளியில் புதிய 6 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதனை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் பள்ளி மாணவியுடன் குத்துவிளக்கு ஏற்றினார். அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் , பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கியம்மாள் மற்றும் கம்பம் நகர்மன்ற உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ் குமார் ,நகர் மன்ற உறுப்பினர்கள் சாதிக் அலி, சர்புதீன், சுந்தரி, சாபிரா பேகம், அமுதா, சகிதா பானு, அன்புகுமாரி ஜெகன் பிரதாப் ,மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கியம்மாள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.