பெண் தற்கொலை
மூணாறு, : மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான நல்லதண்ணி எஸ்டேட், நடையார் டிவிஷனைச் சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி மீரா 25. இவர்களுக்கு ஐந்து, இரண்டரை ஆகிய வயது குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மீரா நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர்களுக்கு திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆனதால், சம்பவம் குறித்து தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
மூணாறு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.