எம் சாண்ட் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல்: சப்கலெக்டர் நடவடிக்கை
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் கனிம வளங்கள் திருட்டை தடுக்கும் விதமாக பெரியகுளம் சப்- கலெக்டர் ரஜத்பீடன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
க.விலக்கு வருஷநாடு ரோட்டில் அண்ணா கூட்டுறவு நுாற்பாலைக்கு பின்புறம் உள்ள ரோட்டில் சென்ற லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
லாரிகளில் மூன்று யூனிட் அளவிலான எம் சாண்ட் இருந்துள்ளது. இதற்கான அனுமதி சீட்டு இல்லை.
இதனைத் தொடர்ந்து லாரிகளை நிறுத்தி விட்டு டிரைவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மாற்று டிரைவர் உதவியுடன் லாரிகளை க.விலக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
கோவில்பட்டி வி.ஏ.ஓ., சுரேஷ்குமார் புகாரில் எம் சாண்ட் கொண்டு சென்ற லாரிகள் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப் பதிந்து, லாரி உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.