தேனியில் 33 விபத்து பகுதி; 5 ஆண்டுகளில் 330 பேர் பலி
தேனி : தேனி மாவட்டத்தில், கொச்சி – தனுஷ்கோடி, திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த ரோடுகள் வழியாக கேரளாவிற்கு சுற்றுலா, சபரிமலை அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் என போக்குவரத்து பிசியாக இருக்கும்.
சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில், இம்மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும், 33 இடங்கள் ‘பிளாக் ஸ்பாட்’ எனும் விபத்து பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 2019 முதல் 2024 வரை 950 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 330 பேர் இறந்துள்ளனர். தவிர, பிற பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும், 100 பேர் வரை உயிரிழக்கின்றனர். பிளாக் ஸ்பாட் பகுதிகளில் விபத்துகளை குறைக்க என்ன மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.