தேக்கடி ஏரியில் நிறுத்தப்பட்ட கேரள படகு நிறுவனத்திற்கு பணம் தராததால் சிக்கல்
கூடலுார் : முல்லைகூடலுார் : முல்லைப் பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்காக அணையில் பாதுகாப்பு பணிக்காக 5 கேரள போலீசார் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசு சம்பளம் வழங்கி வருகிறது.
ப் பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்காக அணையில் பாதுகாப்பு பணிக்காக 5 கேரள போலீசார் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசு சம்பளம் வழங்கி வருகிறது.
ஆனால் கேரள அரசு அணை பாதுகாப்பு பணிக்காக 140 போலீசாரை நியமித்து ஷிப்ட் முறைப்படி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தேக்கடி ஏரியிலிருந்து அணைப் பகுதிக்கு சென்று வர 9 பேர் செல்லும் வகையில் ஒரு படகு உள்ளது. இந்நிலையில் 15 பேர் செல்லக்கூடிய வகையில் 150 குதிரை திறன் கொண்ட மேலும் ஒரு புதிய படகு கேரள போலீசாருக்காக ரூ.39.50 லட்சம் மதிப்பீட்டில் புனேயிலிருந்து வாங்கப்பட்டு 2024 அக்டோபரில் பயன்பாட்டிற்கு வந்தது.
20 மணி நேரம் ஓடிய பின்பு இப் படகிற்கு சர்வீஸ் செய்ய வேண்டும். இதற்காக கேரள போலீசார் புனேயிலிருந்து வாங்கப்பட்ட நிறுவனத்திற்கு தகவல் அனுப்பினர். ஆனால் அப்படகுக்கான தொகையை இதுவரை செலுத்தாததால் சர்வீஸ் செய்ய முடியாது என தெரிவித்துவிட்டனர்.
இதனால் படகு இயக்காமல் தேக்கடி ஏரியின் கரையில் கடந்த இரண்டரை மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படகை இயக்குவதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என இடுக்கி எம்.பி., ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.