கலெக்டர் அலுவலகத்தில் கவுன்சிலர் மனு
தேனி அல்லிநகரம் நகராட்சி 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா. இவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், ‘நகராட்சியில் கடந்த 5 மாதங்களாக கவுன்சில் கூட்டம் நடைபெறவில்லை. அதிகாரிகளும் போதிய அளவில் இல்லை. இதனால் நகர்பகுதி முழுவதும் குப்பையாக காட்சியளிக்கிறது. பைபாஸ் ரோட்டில் கொட்டப்படும் குப்பைக்கு சிலர் தீ வைக்கின்றனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்பாதிப்புகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.