Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

விரைவு போக்குவரத்துக்கழக பஸ் டெப்போ அமைக்க நடவடிக்கை தேவை

மாவட்டத்தில் எஸ்.இ.டி.சி., (அரசு விரைவு போக்குவரத்து கழகம்) பஸ் டெப்போ அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருவனந்தபுரம், மைசூரு நகரங்களுக்கு விரைவு பஸ்கள் இயக்க வேண்டும்.’ எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்டத்தில் அரசு போக்குவரத்துத்துறைக்கு சொந்தமாக பெரியகுளம், தேனி, போடி, தேவாரம், கம்பம் 1,2, லோயர்கேம்ப் ஆகிய 7 பஸ் டெப்போக்கள் உள்ளன.

மாவட்டத்தில் போடி, கம்பம், தேனி, வருஷநாடு பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ்களுக்கு நிகராக அரசு விரைவு பஸ்களிலும் வார இறுதி நாட்களில் பயணிகள் ‘புக்கிங்’ செய்கின்றனர்.

ஆனால் தேனி மாவட்டத்தில் எஸ்.இ.டி.சி., பஸ்கள் நிறுத்துவதற்கு, பராமரிப்பதற்கு டெப்போ இல்லை. மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் விரைவு பஸ்கள் திண்டுக்கல் டெப்போவில் இருந்து எடுத்து வரப்பட்டு, பின் இங்கிருந்து இயக்கப்படுகிறது. மற்ற மண்டலங்களில் இருந்து வரும் எஸ்.இ.டி.சி., பஸ்கள் ஆங்காங்கே உள்ள டெப்போக்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால் ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.

அதேபோல் தேனியில் இருந்து தொழில், வேலை தொடர்பாக பலர் திருவனந்தபுரம், மைசூரு நகரங்களுக்கு செல்கின்றனர். இந்த வழித்தடங்களில் விரைவு பஸ்கள் இயக்கினால் பயணிகள் பலர் பயனடைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *