மின் மோட்டார்கள் திருட்டு கலெக்டரிடம் விவசாயிகள் மனு
தேனி: உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் விவசாயிகள், ஈஸ்வரன், கணேசன் உள்ளிட்டோர் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் யிடம் வழங்கி மனுவில், ‘நிலத்தில் உள்ள மின் மோட்டார்கள், மின் வயர்கள் தொடர்ந்து திருடு போகின்றன.
இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் இரவில் தோட்டத்தில் காவல் பணி மேற்கொள்ளவதற்கும் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். பா.ஜ., நிர்வாகி கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.