மரத்தை அகற்ற கோரி மனு
தேனி: தேனி நகராட்சி அலுவலகத்தில் ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி நிர்வாகிகள் வழங்கிய மனுவில், பொம்மையகவுண்டன்பட்டி நகராட்சி குடியிருப்பு பகுதியில் இலவம்பஞ்சு மரம் விழும் நிலையில் உள்ளது.
இம்மரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படும்.
பொருட்கள், மனித சேதமின்றி மரத்தினை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.