டூவீலர் மோதி முதியவர் இறப்பு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே புள்ளிமான் கோம்பையை சேர்ந்தவர் காமன் 76, விவசாயத்துடன் கால்நடைகளையும் பராமரித்து வந்தார்.
மூன்று நாட்களுக்கு முன் புள்ளிமான்கோம்பை – வத்தலகுண்டு ரோட்டில் நடந்து சென்றார் பின்னால் வந்த டூவீலர் காமன் மீது மோதி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் சிகிச்சை பலனின்றி இறந்தார். பேரன் சூர்யா புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து டூவீலர் ஓட்டி சென்ற சித்தையகவுண்டன்பட்டியை சேர்ந்த பிச்சைமணி என்பவரிடம் விசாரிக்கின்றனர்.