தோல், முடி சிகிச்சை கிளினிக் திறப்பு விழா
தேனி; தேனி போனிட்டா தோல், முடி பராமரிப்பு நிறுவனத்தின் கம்பம் கிளினிக் திறப்பு விழா நடந்தது. எம்.பி. தங்க தமிழ்செல்வன் திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் பங்கேற்றார். விழாவில் நிறுவன நிர்வாகிகள் கதிர்வேல், கவிதா, சந்திரசேகர், அமுதா பங்கேற்றனர். இயக்குநர் மோகன்ராஜ் கூறுகையில், ‘தோல், முடி சிகிச்சைகள் அதிநவீன தொழில் நுட்பத்தில் குறைந்த செலவில் அளிக்கப்படுகிறது. மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு சிகிச்சைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன.’, என்றார். டாக்டர் நந்தினி நன்றி தெரிவித்தார்.