சர்வதேச வன நாள் மரக்கன்று நடும் விழா
பெரியகுளம்: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை, கும்பக்கரை அருவி பகுதியில் சர்வதேச வனதினத்தை முன்னிட்டு நேரு யுவகேந்திரா மற்றும் திரவியம் மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் தூய்மை பணி நடந்தது.
பெரியகுளம் ரேஞ்சர் ஆதிரை தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா அலுவலர் ஞானம் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். திரவியம் கல்லூரி பேராசிரியர்கள் முத்துலட்சுமி, அழகேசன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன் செய்திருந்தார்.