டூவீலர் –டிப்பர் லாரி விபத்தில் ஒருவர் பலி
தேவதானப்பட்டி; கொடைக்கானல் மலை அடிவாரம் டம்டம் பாறை அருகே டூவீலர் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி சதீஷ்குமார் பலியானார்.
ஆண்டிபட்டி தாலுகா ரெங்கநாதபுரம் காலனி தெரு பால் வியாபாரி சதீஷ்குமார் 27.
தனது சொந்த ஊரான கொடைக்கானல் பூம்பாறையில் திருவிழாவிற்கு மனைவி தேவி, குடும்பத்தினருடன் சென்றார்.
இந்நிலையில் சதீஷ்குமார் ஒரு டூவீலரிலும், மைத்துனர் நாகராஜ், உறவினர் காளிராஜ் மற்றொரு டூவீலரிலும் பூம்பாறையில் இருந்து கீழே வந்து கொண்டிருந்தனர். டம்டம் பாறை அருகே எதிரே வந்த டிப்பர்லாரி சதீஷ்குமார் மீது மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் ராஜாராமை 40, தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் விபத்தில் காயமடைந்தனர்.