சேதமடைந்த குவிலென்ஸ் கண்ணாடிகள் மாற்றப்படுமா
கம்பம்: நெடுஞ்சாலை வளைவுகள், மலை ரோடுகளில் ஹேர்பின் வளைவுகளில் வைக்கப்பட்டுள்ள குவிலென்ஸ் கண்ணாடிகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன.
விபத்து நடைபெறும் வாய்ப்புள்ள இடங்கள், அபாயகரமான வளைவுகள், மலை ரோடுகள் உள்ளிட்ட பல இடங்களில் முன்னால் வரும் வாகனங்களை தெரிந்து கொள்ள நெடுஞ்சாலைத்துறை குவிலென்ஸ் கண்ணாடிகளை வைத்துள்ளது. உத்தமபாளையம் தேரடி, அணைப்பட்டி, ஹைவேவிஸ், குமுளி, கம்பமெட்டு மலைச் சாலைகளில் பல இடங்களில் வைத்துள்ளனர்.
ஆனால் வைக்கப்பட்டுள்ள குவிலென்ஸ் கண்ணாடிகளை கவனித்து, பராமரிப்பது இல்லை. விளைவு பல இடங்களில் சேதமடைந்து பயனில்லாத நிலையில் உள்ளது. ஹைவேவிஸ் மலை ரோடு உள்ளிட்ட இடங்களில் சேதமடைந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த குவிலென்ஸ் கண்ணாடிகளை மாற்றி புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.