உதவிப் பேராசிரியர் தகுதி தேர்வு எழுத 1730 பேருக்கு அனுமதி
தேனி: மாவட்டத்தில் உதவி பேராசிரியர் தகுதித்தேர்வான டி.என்.எஸ்.இ.டி., தேர்வு 3 மையங்களில் நடக்கிறது. தேர்வினை எழுத 1730 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கல்லுாரி உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு டி.என்.எஸ்.இ.டி., எனப்படும் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. நேற்று துவங்கியது, மார்ச் 9 வரை நடக்கிறது. இத்தேர்வு கணினி வழித்தேர்வாகும். காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை என இரு வேளைகளில் நடக்கிறது.
மாவட்டத்தில் இத்தேர்வு பெரியகுளம் மேரிமாதா கலை அறிவியல் கல்லுாரி, தேவதானப்பட்டி கல்வி இன்டர்நேஷனல் பள்ளி, ஆண்டிபட்டி பாரத்நிகேதன் பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.
பெரியகுளத்தில் 890 பேர், ஆண்டிபட்டியில் 360 பேர், தேவதானப்பட்டியில் 480 பேர் என மொத்தம் 1730 பேர் மாவட்டத்தில் இத்தேர்வை எழுதுகின்றனர்.