மார்ச் 29 வரை விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைய சிறப்பு முகாம்
தேனி : தேனி கோட்ட தபால்துறை, இண்டியா போஸ்ட் மேமெண்ட்ஸ் வங்கி சார்பில், விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பு முகாம் மார்ச் 10 முதல் 29 வரை நடத்த உள்ளது. பயணங்களின் போது எதிர்பாராத விபத்துகளால் பாதிக்கப்படும் பொது மக்கள் நலன் கருதி விபத்து காப்பீட்டுத் திட்டத்தை தபால்துறை, வழங்குகிறது. இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆதார் எண், அலைபேசி எண், வாரிசுதாரரின் விபரங்கள் தேவை.
ரூ.559க்கு ரூ.10 லட்சம் காப்பீடு, ரூ.799க்கு ரூ.15 லட்சம் காப்பீடு திட்டங்களில் இணையலாம். அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம் மார்ச் 29 வரை நடக்கிறது. கூடுதல் விபரங்களுக்கு இண்டியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியை 04546 – 260501 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.