வாழை ஏற்றுமதி குறித்து பணி அனுபவ பயிற்சி
தேனி : பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர்கள் பாலாஜி, பரணிதரன், பாரதிசங்கர், பூபாலன், சாருதத், தானேஸ்வரன், மு.தினேஷ், ஜெ.தினேஷ், ஜெகன், ஜெகன்ராஜ் உள்ளிட்ட 10 மாணவர்கள் துறை பேராசிரியர்கள் வழிகாட்டுதலில் பணி அனுபவ திட்ட கல்வி பெற பூமலைக்குண்டில் உள்ள வாழை ஏற்றுமதி நிறுவனத்தில் பயிற்சி பெற்றனர். அங்கு மார்ச் 1 முதல் 7 ம்தேதி வரை வாழை சாகுபடி விபரங்கள்,
அறுவடை, பதப்படுத்துதல், ஏற்றுமதிக்கு தயார் படுத்துதல், பேக்கிங் செய்வது வரை உள்ள நடைமுறைகளுக்கான பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியை த்ரீ ஸ்டார் வாழை ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் பாண்டியன்தலை மையில் வழங்கப்பட்டு, 10 மாணவர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன