சப்- – கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்
பெரியகுளம்: தேனி புதுபஸ்ஸ்டாண்ட் அருகே பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி வீடு இல்லாத பட்டியலின மக்களிடம் வழங்க வேண்டும் என சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டியலின கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ராயன் தலைமை வகித்தார். போராட்டத்தில் தேனி புதுபஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்க வேண்டும். அங்கு அமைக்கப்பட்டுள்ள சுற்றுவேலி அகற்ற வேண்டும்.
மீட்கப்படும் நிலத்தில் வீடற்ற பட்டியலின மக்களுக்கு வழங்க வலியுறுத்தினர். பல முறை வருவாய்த்துறையினருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இதை கண்டித்து வளாகத்தில் கீழே 10நிமிடம் உட்காந்து போராட்டம் நடத்தினர்.
தென்கரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனை தொடர்ந்து சப்-கலெக்டர் ரஜத்பீடனிடம் மனு கொடுத்து முறையிட்டனர். சப்-கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து கலைந்து சென்றனர்.