Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

கொத்து கொத்தாய் காய்கறிகள்: செழித்து வளர்ந்த மூலிகைச் செடிகள் வீட்டுத் தோட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் தம்பதி

வீட்டுத் தோட்டம் அமைத்து இயற்கை சாகுபடியில் பழங்கள், பூக்கள், மூலிகை, கீரைகள், சமையலுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே அறுவடை செய்து, பிறரின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர் போடி புதுக்காலனியில் வசிக்கும் வினோத்குமார், சரண்யா தம்பதி.

இவர்கள் காய்கறி கழிவுகளை வீணாக்காமல் தொட்டியில் போட்டு, மக்க வைத்து வீட்டிலேயே உரமாக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

பசுமைத் தோட்டமாக மாறி உள்ள இவர்களது வீட்டில் நுழைந்தவுடன் நம்மை பூத்து குலுங்கும் பூக்கள் வரவேற்கின்றன. நறுமணம் கமலும் மூலிகைச் செடிகள், சுவையை அறிய துாண்டும் மாதுளை, எலுமிச்சை, சீதா, கொய்யா பழங்கள் காய்த்துள்ளன.

இங்கு பூக்களில் உள்ள தேனை குடிப்பதற்காக தேன் சிட்டு, ஸ்டிச்சிங் பேர்ட், சிட்டுக் குருவி உள்ளிட்ட பறவைகள் வந்து செல்கின்றன. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் வீட்டுத் தோட்டத்தை அமைத்துள்ளனர்.

இந்த வீட்டு தோட்டத்தில் துாதுவளை, துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி, பிரண்டை, ஓமவள்ளி, கருந்துளசி, வில்வம், மருதாணி, குப்பைமேனி, புதினா, கறிவேப்பிலை, வெங்காயம் உள்ளிட்ட மூலிகைச் செடிகள் உள்ளன.

காய்கறிகளில் சுரைக்காய், கத்தரிக்காய், பீர்க்கங்காய், அவரை, பச்சை மிளகாய், பீன்ஸ், முருங்கைக்காயும், மஞ்சள் சேமக் கிழங்கு, கீரைகளில் அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, மிளகு தக்காளியும், மாதுளை, சீதா, எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழமும், பூக்களில் மூன்று வண்ணங்களில் செம்பருத்தி, அரளி, மல்லி, கனகாம்பரம், ரோஜா, பிரம்ம கமலம் பூக்கள் மட்டுமின்றி வீட்டின் முன்பாக அழகு தொடர்பான செடிகள் வளர்த்து உள்ளனர்.

மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது

சரண்யா, உணவு பாதுகாப்பு அலுவலர், போடி: தோட்டங்களில் காய்கறி, கீரை, பூக்கள் வளர்ப்பதில் எனது மாமியார் கோமதி மிகுந்த ஆர்வம் கொண்டு செயல்பட்டு வந்தார்.

அந்த ஆர்வம் ஏற்பட்டு, மாமியார் கொடுத்த ஊக்கத்தால் முதலில் வீட்டின் முன்பாக தொட்டிகளில் வளர்த்து வந்தோம். உரிய பாதுகாப்பு இல்லாததால் வீட்டின் வளாக பகுதியில் உள்ள மண் தரை, தொட்டிகளிலும் வளர்த்து வருவதால் நல்ல பலன் கிடைத்து வருகிறது.ZzDCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *