சுடுகாட்டில் சரக்கு விற்றவர் கைது
தேவதானப்பட்டி, மார்ச் 11: சுடுகாட்டில் மதுபானம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேவதானப்பட்டி எஸ்.ஐ வேல்மணிகண்டன் மற்றும் போலீசார் தேவதானப்பட்டி சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி(29) என்பவர் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் கருப்பசாமியை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.