கல்லுாரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு
தேனி; பெரியகுளம் மேரி மாதா கலை அறிவியல் கல்லுாரியில், தேனி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், இணைய வழி சைபர் குற்றங்களில் மாணவ, மாணவிகள் சிக்காமல் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது
மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்சாண்டர் தலைமை வகித்தார். முதல்வர ஐசக் பூச்சாங்குளம் முன்னிலை வகித்தார். ஏ.டி.எஸ்.பி, பேசுகையில், ஓ.டி.பி., தொடர்பான குற்றங்கள், சமூக வலைதளங்களில் நடக்கும் குற்றங்கள், ஆன்லைன் கேம்ஸ், போலியான அலைபேசி செயலிகளால் ஏற்படும் பாதிப்பு, போலி செயலிகளில் பெறப்படும் கடன்களால் ஏற்படும் பாதிப்பு, டிஜிட்டல் கைது என ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வகை குற்றங்கள் குறித்து தெரிவித்து, இதிலிருந்து மாணவிகள், மாணவர்கள் எவ்வாறு தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் எனப் பேசினார்.
தொழில்நுட்பப் பிரிவு எஸ்.ஐ., அழகுபாண்டி, அலைபேசிகள், லேப்டாப், டிஜிட்டல் பயன்பாடுகளை பாதுகாப்பாக மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்துவது பற்றி விளக்கினார்.பாதிக்கப்பட்டவர்கள் உடனே சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையத்தில் புகார் தெரிவித்து தீர்வு காணலாம் என்றார்.