ஹாங்காங் செல்லும் அரசு பள்ளி மாணவி
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துகிறது. 2022-20-23 ஆம் ஆண்டு போட்டியில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி ரித்திகா, 15, சிறார் திரைப்பட போட்டியில் பங்கேற்றார்.
இணையத்தில் வெளியிடப்படும் குறும்படத்தை மையப்படுத்தி மாணவர்கள் நடிக்க வேண்டும். இதில் சிறந்த நடிப்பு, முகபாவனை, உடல்மொழி ஆகியவற்றை மையப்படுத்தி நடுவர்கள் சிறந்த நடிப்பை தேர்வு செய்வர். இந்தப் போட்டியில் ரித்திகா வெற்றி பெற்றார்.
இதையடுத்து, ரித்திகா உட்பட 20 மாணவர்கள், இரு கல்வி அதிகாரிகள் சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு ஐந்து நாள் கல்வி சுற்றுலா சென்றனர். இவர்களின் பயண செலவுகளை கல்வித்துறை ஏற்கிறது. ரித்திகாவை, தலைமை ஆசிரியர் பாண்டியன், கலைத்திருவிழா பொறுப்பாசிரியர்கள் உமாமகேஸ்வரி, பாலமுரளி வாழ்த்தினர்.