ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி காளிநாயக்கர் புளியமரத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் 30. காட்ரோடு பிரிவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதே ஸ்டாண்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்
யோகேஸ்வரன் 33. இருவருக்கும் இடையே தொழில் போட்டியால் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சவாரி சென்று விட்டு ஆட்டோஸ்டாண்ட்டிற்கு வந்த பாண்டியராஜனை, யோகேஸ்வரன் கத்தியால் குத்தினார். தடுக்க வந்த பாண்டியராஜன் அத்தை முத்துப்பாண்டியம்மாளை அவதூறாக பேசினார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பாண்டியராஜன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.