பத்திரப் பதிவு மறு சீரமைப்பு செய்ய தேவதானப்பட்டி மக்கள் எதிர்பார்ப்ப
ஆடி பெருக்கில் பத்திரபதிவு செய்யாமல் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். விரைவில் வத்தலக்குண்டு பத்திர பதிவு அலுவலகத்தில் இருந்து பெரியகுளம் பத்திரபதிவு மாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி மற்றும் உட்கடை பகுதிகளான காட்ரோடு, மஞ்சளாறு அணை, ஜி.கல்லுப்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி, காமக்காபட்டி, கோட்டார்பட்டி, பாலபட்டி, மீனாட்சிபுரம் உட்பட 30 க்கும் அதிகமான கிராம பகுதிகள் உள்ளன. இப் பகுதியினர் பத்திரப்பதிவுக்கு திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு செல்ல வேண்டியுள்ளது.
இதனால் பணம்,நேர விரயமாகிறது. ஆக.,3 ஆடி பெருக்கு நல்லநாளில் சொத்துக்கள் வாங்க தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர் வத்தலக்குண்டு பத்திரப்பதிவு அலுவலகம் சென்றனர். அங்கு அந்தப்பகுதியினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெரியகுளம் தாலுகாவை சேர்ந்த 5 பேருக்கு மட்டும் வற்புறுத்தலில் பத்திரம் பதியப்பட்டுள்ளது. மற்ற 5 பேருக்கு பத்திரங்கள் பதியவில்லை. இதனால் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர்கள் எங்கள் பகுதி பத்திரங்களை மறு சீரமைப்பு செய்து பெரியகுளம் இணை சார் பதிவாளர் அலுவலகம் 1ல் பதிய பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது குறித்து சில மாதங்களுக்கு முன் பெரியகுளம் வந்த டி.ஐ.ஜி., ரவீந்திரநாத்திடம், பொதுமக்கள் வைத்த கோரிக்கைக்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என ரவீந்திரநாத் கூறியதும், இது வரை நடவடிக்கை எடுக்காதது குறிப்பிடத்தக்கது.