மார்ச் 21ல் மூணாறு ஊராட்சி துணை தலைவர் தேர்தல்
மூணாறு: மூணாறு ஊராட்சியில் காலியாக உள்ள துணைத் தலைவருக்கான தேர்தல் மார்ச் 21ல் நடக்கிறது.
மூணாறு ஊராட்சியில் 17ம் வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த பாலசந்திரன் கடந்த உள்ளாட்சி தேர்தலில் இடது சாரி கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர், 2023 பிப்ரவரியில் காங்கிரஸ்சில் இணைந்தார். அவரை, கட்சி தாவல் தடை சட்டத்தில் உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்தும், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் பிப் 25ல் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அவர் 2023 செப்டம்பர் முதல் ஊராட்சி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அந்த பொறுப்பு காலியாக உள்ளதால் மார்ச் 21ல் துணைத் தலைவருக்கான தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதற்கு தாலூகா புள்ளியல் துறை அதிகாரி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தற்போது காங்., வசம் உள்ள ஊராட்சியில் காங்., 11, இடது சாரி கூட்டணி 8 என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர்.