போக்சோ வாலிபருக்கு 29 ஆண்டுகள் சிறை
மூணாறு: பதினாறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே பாம்பாடும்பாறை, நெல்லி பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஷினேஷ் 26. இவர், 2022ல் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வழக்கு கட்டப்பனை அதிவேக போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சு, ஷினேஷ்க்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.