அரசு பள்ளியில் கலை விழா
கூடலூர், மார்ச் 15: கேரளா இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டம் உப கல்வி மாவட்டத்தில் வண்டன் மேடு கிராம பஞ்சாயத்து உட்பட்ட தமிழ் வழி பள்ளிக்கூடமான சாஸ்தா நடை அரசு ஆரம்பப் பள்ளியில் பள்ளியின் சார்பாக மாணவ, மாணவிகளின் கலைவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் தலைமயில் தலைமையாசிரியர் பாண்டுரெங்கன் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவை வார்டு உறுப்பினர் கருப்பசாமி சுருளி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் குழந்தைகளின கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு ஏற்பாடுகளை சைலா, ஆசிரியர்கள் முருகன், நிவேதா செய்திருந்தனர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். முடிவில் ஆசிரியை சண்முக பிரியா நன்றி கூறினார்.