மாணவர் உயிரிழப்பு: எஸ்.பி., விளக்கம்
தேனி: திருநெல்வேலி அண்ணாநகர் விக்னேஷ் 21. இவர் போடி அரசு இன்ஜினியரிங் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்தார்
பிப்.14ல் உடலில் காயங்களுடன் கழிவறையில் இறந்து கிடந்தார். மாணவரின் பெற்றோர் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
பிப்.15ல் மாணவரின் பெற்றோர் சில அமைப்பினர் இணைந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மாணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பெற்றோர் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் மாணவரின் உடல், தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.பி., சிவபிரசாத் கூறியதாவது: இதில் சந்தேக மரணம் என்பதற்கு ஆதாரம் இல்லை.
பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளோம்.
விசாரணை அதிகாரி, டி.எஸ்.பி., அறிவியல் பூர்வமான விபரங்கள் குறித்து பெற்றோரிடம் ஏற்கனவே தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
இருப்பினும் பெற்றோர் சி.பி.சி.ஐ.டி., விசாரணை செய்ய கோரியுள்ளனர் என்றார்.