தேனியில் ராஜவாய்க்கால் துார்வாரும் பணி துவக்கம் 5 இடங்களில் த ரைப்பாலம் அமைகிறது
தேனி; தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் ராஜவாய்க்கால் பகுதியில் ரூ.2.26 கோடி மதிப்பில் துார்வாரும் பணியை நகராட்சி துவங்கி உள்ளது. இந்த வாய்க்காலில் 5 இடங்களில் தரைப்பாலம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி நகர்பகுதியில் கொட்டக்குடி ஆற்றில் துவங்கி மதுரை ரோடு ராஜாகுளம் வரை 2.47 கி.மீ., துாரத்திற்கு ராஜவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இருந்த பெரும் பாலான ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டது.
ஆனால் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சி கட்டட பணிகளை முழுவதும் அகற்ற அரசிடம் நிதி கோரப்பட்டது.
5 இடங்களில் தரைப்பாலம் அமைக்க ரூ.2.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ராஜவாய்க்கால் துார்வாரும் பணியை நகராட்சி நிர்வாகம் துவங்கி உள்ளது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 95 மீ., நீளம், 9 மீ., அகலம், 3 மீ., ஆழத்திற்கு துார்வாரும் பணிகள் நடக்க உள்ளது.
இது தவிர டி.எஸ்.பி. அலுவலகம், சோலை மலை அய்யானர் கோயில் தெருவில் 2 என மொத்தம் 5 இடங்களில் தரைப்பாலமும் புதிதாக அமைக்கப்பட உள்ளது’, என்றார்.