கேரளாவிற்கு உடைகற்கள் கடத்திய இருவர் கைது
தேவதானப்பட்டி; கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன்சோலை தாலுகா பைசன்வேலியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஜிஜோ 25. அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் லாரி டிரைவர் ராஜா 40. இருவரும் இரு லாரிகளில் தலா 5 டன் உடைகற்களை ஏற்றிக்கொண்டு, குள்ளப்புரத்திலிருந்து வைகைஅணை ரோடு வழியாக கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.
சப்-கலெக்டர் ரஜத்பீடன், தாசில்தார் மருதுபாண்டி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இரு லாரி டிரைவர்களிடம் அனுமதி சீட்டினை சோதனையிட்டனர். திருத்தம் செய்யப்பட்டு இரு டிரைவர்களும் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. வி.ஏ.ஓ., ராஜ்குமார் புகாரில், ஜெயமங்கலம் போலீசார் ஜிஜோ, ராஜா இருவரையும் கைது செய்தனர்.-