கலைப் பொருட்கள் இருக்கிறதா அரசு மியூசியத்திற்கு தரலாம்
மதுரை, : மதுரை, தேனி அரசு மியூசியங்களில் பொதுமக்களிடம் இருந்து கலைப்பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.
மானிடவியல், தொல்பொருட்கள், நாணயங்கள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடி, பழங்குடியின பொருட்கள், விலங்கியல், தாவரவியல், சிறப்பு தபால்தலை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் பயன்படுத்திய பொருட்கள், போன்றவை பொதுமக்களிடம் இருந்தால் மியூசியத்தில் ஒப்படைக்கலாம்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் பயன்படுத்திய பொருட்களுக்கு முன்னுரிமையுடன் சன்மானம் வழங்கப்படும். பொருட்களை ஒப்படைப்பவர் பெயரிலேயே சேர்க்கைப் பதிவேட்டில் பதிவு செய்யப்படுவதால் வரலாற்றில் அவர்களது பெயரும் இடம்பெறும் என மதுரை அரசு மியூசிய காப்பாட்சியர் மருது பாண்டியன் தெரிவித்துள்ளார்.