பிரைமரி, நர்சரி பள்ளி ஆண்டு விழா
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளித் தாளாளர் பாண்டிச்செல்வம் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர்கள் கபில், டாக்டர் வாகினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பாலமுருகன், திண்டுக்கல் ஏ.பி.சி., பாலிடெக்னிக் கல்லுாரி தாளாளர் ராதாகிருஷ்ணன், வர்த்தக பிரமுகர் பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர்.
பிரைமரி முடித்த குழந்தைகள், 5ம் வகுப்பு முடித்து 6ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
கல்வி ஆலோசகர் நியூட்டன் தீபக், துணை முதல்வர் லதா ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் அருணா நன்றி கூறினார்.