மாவட்டத்தில் நவம்பரில் 1361.3 மி.மீ., மழை பதிவு 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைவு
தேனி : மாவட்டத்தில் கடந்த நவம்பரில் 1361.3 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த மழை அளவு கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைவாகும்.
தேனி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சில மாவட்டங்களில் ஒன்றாகும். தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை இரண்டிலும் மழை கிடைக்கும்.
வடகிழக்கு பருவமழை கூடுதலாக கிடைக்கும். மாவட்டத்தில் 13 இடங்களில் உள்ள மழைமானி மூலம் மழையளவு அளவிடப்படுகிறது. கடந்த மாதம் 22 நாட்கள் மழை பெய்ததது. இதில் 1361.3 மி.மீ., மழை பதிவானது. நவம்பரில் 179.7 மி.மீ., இயல்பு மழை பெய்ய வேண்டும். அதனை விட கூடுதலாக பதிவாகி உள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் பதிவான மழை அளவுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். கடந்தாண்டு 3123.9 மி.மீ., 2022ல் 2035.1மி.மீ., 2021ல் 3669.7 மி.மீ., 2020ல் 2579 மி.மீ., மழை பெய்துள்ளது.
இது தவிர கடந்த இரு மாதங்களில் பெய்த மழையில் 2 பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். கால்நடைகள் 2 பலியாகி உள்ளன. வீடுகள் 63 பகுதி சேதமும், 6 வீடுகள் முழுசேதமும் அடைந்துள்ளன.